நாடு பூராகவும் ஊரடங்கு உத்தரவு அமுல்...!
நாடு பூராகவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் 12.00 மணி முதல் நாளை காலை 05 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இவ்வாறு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டது.
அத்துடன் நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் பதில் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.
மேலும், கலவரங்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு அவர் உத்தரவிட்டார்.
அதேபோல், கலவரக்காரர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை கைது செய்ய பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.