இலங்கை அணிக்கு புதிய வீரர்!

இலங்கை அணிக்கு புதிய வீரர்!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டிக்கு இலங்கை அணி சார்பாக புதிய வீரர் ஒருவர் களமிறங்கவுள்ளார்.

லக்ஷித மனசிங்க எனும் புதிய வீரரே இலங்கை அணி சார்பில் இவ்வாறு களமிறங்கவுள்ளார்.

இவர் கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர்.

சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்‌ஷனவின் வலது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே, லக்ஷித மனசிங்க எனும் புதிய வீரர் இலங்கை அணி சார்பில் களமிறங்கவுள்ளார்.

இதேவேளை, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிஸ்ஸங்க மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 வது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.