யாழில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விசித்திர அறிவிப்பு பேனர்! பலரின் கவனத்தையும் ஈர்த்தது

யாழில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விசித்திர அறிவிப்பு பேனர்! பலரின் கவனத்தையும் ஈர்த்தது

பொது இடங்கள் மற்றும் அடுத்தவர்களின் தனியார் காணிகளில் குப்பை போட வேண்டாம் என பல அறிவித்தல் பதாகைகள் தொங்கவிடப்பட்டிருப்பதை நாம் கண்டிருப்போம். அவ்வாறு அறிவித்தல் காட்சிப்பட்டிருந்தாலும் எம்மில் பலர் அந்த இடத்தில் குப்பைகளை போடுவது வழமை.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில், வயல் காணி ஒன்றை அண்மித்த பகுதியில், குப்பை போட வேண்டாம் என்பதை, வித்தியாசமான முறையில் அறிவித்தலாக உரிமையாளர் காட்சிப்படுத்தியுள்ளார்.

குறித்த அறிவித்தல் பேனரில் “அரிசிக்கு வரிசையில் நிற்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை”, “விவசாயம் காப்போம்”, “இவ்விடத்தில் குப்பை போடவேண்டாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. வயல் பகுதியில் குப்பை போட வேண்டாம் என்று சொல்வதற்கு பதிலாக இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.