யாழ் பேருந்து சாலையின் சகல பேருந்து சேவையாளர்களும் இன்று பணிப்புறக்கணிப்பில்

யாழ் பேருந்து சாலையின் சகல பேருந்து சேவையாளர்களும் இன்று பணிப்புறக்கணிப்பில்

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண பேருந்து சாலையின் சகல பேருந்து சேவையாளர்களும் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

பேருந்து நடத்துனர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இன்று முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளதாக யாழ்ப்பாண தமிழ் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் அருளாநந்தம் அருள்பிரகாஷ் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

எனவே, குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.