பெற்றோல் திருடப்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கொலை

பெற்றோல் திருடப்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கொலை

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல் வீதி பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடப்பட்டமை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோட்டார் சைக்கிளின் உரிமையாளரை மற்றைய நபர் கத்தியால் குத்தியுள்ளார்.

இக்கொலை இன்று (25) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொரளை காசல் வீதியில் வசிக்கும் 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

கொலையை செய்த சந்தேக நபர் 29 வயதுடைய அந்த பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

பொரளை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.