கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாக இல்லை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாக இருப்பதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என தாம் நம்புவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (26) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக தேவையான வீசா பெற்று அந்த நாட்டுக்கு சென்றுள்ளதால் அவர் தலைமறைவாக இருப்பதாக நான் நம்பவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.