மீண்டும் கொரோனா பரவல் - பயணச்சீட்டு வழங்கல் இடைநிறுத்தம்

மீண்டும் கொரோனா பரவல் - பயணச்சீட்டு வழங்கல் இடைநிறுத்தம்

கொவிட் தொற்று காரணமாக, ராகம புகையிரத நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு பணிபுரியும் ஒரு புகையிரத நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாலும், மேலும் இரண்டு அதிகாரிகளுக்கு அறிகுறிகள் தென்பட்டதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்டேஷன் மாஸ்டர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் ராகம புகையிரத நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், புகையிரத நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.