இளைஞர் குழுக்களுக்கு இடையே வாள்வெட்டு - ஒருவர் பலி!
முல்லைத்தீவு முள்ளியவளை தெற்கு பகுதியில் இளைஞர் குழுக்களுக்கிடையில் இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டாக மாறியுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த நபரொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளது.
வாள்வெட்டிற்கு இலக்கான முள்ளியவளை தெற்கினை சேர்ந்த குடும்பஸ்தரான 32 அகவையுடைய பெருமாள் சதீஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
(26) இரவு இந்த சம்பவம் நடைபெற்ற போதும் முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு கிராமத்தவர்கள் தெரியப்படுத்தியும் பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
உடலம் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிசார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.