 
                            தலைக்கவசத்தால் அடித்து நபரொருவர் படுகொலை!
கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்புவத்த பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஜா எல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெண் ஒருவர் நடத்தும் ஹோட்டலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் உணவு வாங்கி பணம் கொடுத்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஹோட்டல் உரிமையாளரின் தந்தையை பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ராகம பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
                     
                                            