பெண் காவல்துறை உத்தியோகத்தர் மீது கத்தி குத்து..!
வெயங்கொட, கும்பலொலுவ பிரதேசத்தில் கத்தியால் தாக்கப்பட்ட பெண் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் வட்டுப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுங்கமுவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நேற்று (27) இடம்பெற்றுள்ள குறித்த சம்பவத்தில் காவல்துறை இசைக்குழுவில் பணிபுரியும் மீரிகம இருபது ஏக்கர் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் காவல்துறை உத்தியோகஸ்தரே நபரொருவரின் தாக்குதலுக்கு இலக்காகினார்.
குறித்த பெண் காவல்துறை உத்தியோகஸ்தரின் தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.