புதையலுக்காக பலியிடப்பட்டாரா சிறுமி -பிரதேசத்தில் கடும் பதற்றம்...

புதையலுக்காக பலியிடப்பட்டாரா சிறுமி -பிரதேசத்தில் கடும் பதற்றம்...

புத்தளம் மதுரங்குளிய பிரதேசத்தில் நேற்று பிற்பகல் புதையல் ஒன்றை மீட்பதற்காக சிறுமியொருவர் பலிக்கடா ஆக்கப்பட்டதாக எழுந்த சந்தேகம் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

அங்கு, பிரதேசவாசிகள் குறித்த காணியை ஆய்வு செய்த போது, ​​காணியில் வெட்டப்பட்ட குழியில் சிறுமியுடையது என கருதக்கூடிய சில ஆடைகள் கண்டெடுக்கப்பட்டன.

புதையலுக்காக பலியிடப்பட்டாரா சிறுமி -பிரதேசத்தில் கடும் பதற்றம் | Was A Girl Sacrificed To Get A Treasure

புத்தளம், மதுரங்குளி கின்னவத்தை பிரதேசத்தில் உள்ள தனியார் காணி ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பின்னர் இன்று காலை மதுரங்குளிய காவல்துறையினர் அந்த இடத்தில் இருந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்துடன் அண்மைய நாட்களில் இந்த காணிக்கு அருகில் காணப்பட்ட வயோதிபப் பெண்ணொருவரும் சிறுமியொருவரும் காணாமல் போயுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

புதையலுக்காக பலியிடப்பட்டாரா சிறுமி -பிரதேசத்தில் கடும் பதற்றம் | Was A Girl Sacrificed To Get A Treasure

இதனிடையே, புதையல் தோண்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குழியில் நிரம்பியிருந்த தண்ணீரை அகற்றி சிறுமி குறித்த தகவல்களை தேடுவதற்கும் பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.