கடலில் மூழ்கிய மாணவனை தேடும் பணி தீவிரம்: ஐவர் மீட்பு..!

கடலில் மூழ்கிய மாணவனை தேடும் பணி தீவிரம்: ஐவர் மீட்பு..!

காலி - ஹபராதுவ, தல்பே கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் குளித்துக் கொண்டிருந்த 6 மாணவர்களில் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இச்சம்பவம் நேற்றைய தினம் (10.06.2023) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

காணாமல் போனதாக கூறப்படும் மாணவனை பொலிஸார் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குருநாகல் பொத்துஹெர பகுதியைச் சேர்ந்த 16 வயதுடை மாணவனே இவ்வாறு காணாமல் போனதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடலில் மூழ்கிய மாணவனை தேடும் பணி தீவிரம்: ஐவர் மீட்பு | Student Missing In The Sea

சம்பவ தினத்தன்று ஆறு மாணவர்கள் காலி - ஹபராதுவ, தல்பே கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் குளிக்கச் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். ஐந்து மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.  

குருநாகல் பிரதேசத்தில் கல்வி வகுப்பு ஒன்றின் ஏற்பாட்டில் சுற்றுலா சென்றிருந்த மாணவர்கள் குழு ஒன்றை தல்பே கடற்கரை பகுதியில் இந்த அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.