இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட வயோதிபரின் சடலம்…!

இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட வயோதிபரின் சடலம்…!

கம்பஹா, வெலிவேரிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 68 வயதுடைய வயோதிபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வயோதிபரின் சடலம் அப்பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள் இரத்த வெள்ளத்தில் இருந்த நிலையில் இன்று(14) மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெலிவேரிய காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட வயோதிபரின் சடலம்! | Murder Police Investigating Srilanka

இதன் பிரகாரம் நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் .