சிறைக்கு மகனை பார்க்க சென்ற தாய் செய்த மோசமான செயல்..!

சிறைக்கு மகனை பார்க்க சென்ற தாய் செய்த மோசமான செயல்..!

களுத்துறை சிறைச்சாலையில் கைதியாக தண்டனை பெற்று வரும் மகனை பார்க்க போதைப்பொருளுடன் சென்ற தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை வடக்கு பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் களுத்துறை – விலேகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த தாய் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனைப் பார்ப்பதற்காக காற்சட்டையொன்றை எடுத்து வந்த நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் அதனை சோதனையிட்டபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.