குவைத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண்...
குவைத்தில் இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குலசிங்க ஆராச்சிலாகே அனுலா பிரிதிமாலி பெரேரா என்ற 66 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவுக்கு தகவல் வழங்கியுள்ளது.
அவரது இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள நெருங்கிய உறவினரோ அல்லது அவருக்குத் தெரிந்தவர்களோ இருந்தால், தமக்கு விரைவில் அறிவிக்குமாறு வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் இலக்கம் 438/1, நுகாவத்தை வீதி, கிரிவத்துடுவ என்ற முகவரியில் வசிப்பதாக குடிவரவுத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, மேற்படி புகைப்படத்தில் உள்ள பெண்ணை யாரேனும் அறிந்தால், (அமைச்சின் தொலைபேசி இலக்கம்: 011238836/ 0117711163/ 0112323015, மின்னஞ்சல்: consular@mfa.gov.lk அல்லது தூதரகப் பிரிவு, வெளிவிவகார அமைச்சு, 2வது மாடி, செலிங்கோ கட்டிடம் கொழும்பு 01. என்ற முகவரி ஊடாக) அமைச்சுக்கு அறிவிக்குமாறு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.