அம்பாறையில் மாயமான இரு மாணவிகள் களனியில் மீட்பு...

அம்பாறையில் மாயமான இரு மாணவிகள் களனியில் மீட்பு...

அம்பாறை - இங்கினியாகல பிரதேசத்தில் சுமார் ஒரு வார காலமாக காணாமல் போயிருந்த 16 வயதுடைய இரண்டு சிறுமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

களனி – மீகஹவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் இந்த இரண்டு மாணவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மாணவிகள் இருவரும் நெருங்கிய நண்பிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் மாயமான இரு மாணவிகள் களனியில் மீட்பு | Missing Girl Students Found In Sri Lanka Today

இங்கினியாகல - பொல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய பி.ஜி. அஷானி வஷ்மிகா மற்றும் எப்.ஆர். பவீஷா நெத்மினி ஆகிய இரு மாணவிகளே இவ்வாறு காணாமல் போயிருந்தவர்களாகும்.

கடந்த 15ம் திகதி பவீஷா பாடசாலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு அஷானி வீட்டிற்கு வந்துள்ளார்.

அஷானியின் தந்தை கொழும்பில் பணிபுரிகிறார், அவர பாட்டி வீட்டில் வசித்து வருகின்றார். இதற்குக் காரணம் அவர் சிறு வயதிலேயே அம்மா அவளைக் கைவிட்டு சென்றுள்ளார்.

அம்பாறையில் மாயமான இரு மாணவிகள் களனியில் மீட்பு | Missing Girl Students Found In Sri Lanka Today

கடந்த 15ம் திகதி காலை வீட்டுக்கு வந்த பவீஷா, மேலதிக வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

ஆனால் இவ்வாறு சென்ற சிறுமிகள் திரும்பி வராததையடுத்து பவீஷாவின் பெற்றோரும் அஷானியின் பாட்டியும் இங்கினியாகல பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் இந்த இரண்டு சிறுமிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.