மரக்கறி வாங்கச் சென்ற அக்காவும் தம்பியும் லொறி மோதி பரிதாப மரணம்!

மரக்கறி வாங்கச் சென்ற அக்காவும் தம்பியும் லொறி மோதி பரிதாப மரணம்!

சந்தையில் மரக்கறி வாங்க வீதியில் நடந்து சென்ற சகோதரர்கள் இருவர்  வீதி விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவமானது அம்பாந்தோட்டை மாவட்டம், பெலியத்தை பிரதேசத்தில் இன்று (24.06.2023) இடம்பெற்றுள்ளது.

சந்தையில் மரக்கறி வாங்க வீதியில் நடந்து சென்ற சகோதரர்கள் இருவர் மீது பின்னால் வேகமாக வந்த லொறி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலும், மற்றையவர் வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது 14 வயதுடைய எம். தரங்க என்ற சகோதரன் சம்பவ இடத்திலும், 20 வயதுடைய எம்.டில்ஷிகா என்ற சகோதரி வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மரக்கறி வாங்கச் சென்ற அக்காவும் தம்பியும் லொறி மோதி பரிதாப மரணம்! | Two People Were Killed In Ambanthottai

லொறியின் சாரதியைக் கைது செய்துள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.