விமானிகள் பற்றாக்குறை ; தாமதமான சிறிலங்கன் ஏர்லைன்ஸ் - வாய்ப்பை இழந்த இலங்கையர்கள்...

விமானிகள் பற்றாக்குறை ; தாமதமான சிறிலங்கன் ஏர்லைன்ஸ் - வாய்ப்பை இழந்த இலங்கையர்கள்...

சிறிலங்கன் ஏர்லைன்சின் 70 க்கும் மேற்பட்ட விமானிகள் ஏற்கனவே போதிய சம்பளம் இல்லாத காரணத்தால் வேலையை விட்டு விலகியுள்ளதாக விமான நிறுவனத்தின் விமானிகள் தெரிவித்துள்ளனர்.

தென்கொரியாவுக்குச் செல்லவிருந்த இலங்கைப் பணியாளர்கள் குழுவொன்று விமானம் தாமதமானதால் அந்த வாய்ப்பை இழந்த சம்பவம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவர்கள் இதனை வெளிப்படுத்தினர்.

சிறிலங்கன் ஏர்லைன்சிற்குச் சொந்தமான UL 470 விமானம் தாமதமானதால், தென்கொரியாவுக்குச் செல்லவிருந்த இலங்கை ஊழியர்கள் குழுவொன்று அந்த வாய்ப்பை அண்மையில் இழந்ததுடன், பின்னர் இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தின் கவனமும் ஈர்க்கப்பட்டது.

விமானிகள் பற்றாக்குறை ; தாமதமான சிறிலங்கன் ஏர்லைன்ஸ் - வாய்ப்பை இழந்த இலங்கையர்கள் | Srilankan Airlines Pilot Shortagsஇவ்வாறானதொரு பின்னணியில் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகள் இன்று இவ்வாறான வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளனர்.

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு போதிய சம்பளம் மற்றும் ஊதியம் வழங்காததால், கடந்த ஒரு வருடத்தில் 70க்கும் மேற்பட்ட விமானிகள் ஏற்கனவே வேலையை விட்டு விலகியுள்ளதாகவும், மற்றொரு குழு விலக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விமான நிறுவனத்தில் 330 பைலட்டுகள் இருக்க வேண்டியிருந்தாலும், விமான நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால், தற்போது 250 விமானிகள் மட்டுமே சேவையில் உள்ளனர் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தற்போது விமான ஓட்டிகள் பற்றாக்குறை நிலவுவதால், இதுபோன்ற அவசர காலங்களில் விமானிகளை நியமிப்பது கடினம் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.