சட்டவிரோத தொல்பொருள் அகழ்வில் முற்பட்ட இருவர் கைது...
கேகாலை - கலிகமுவ மற்றும் அசிதெனிய பிரதேசங்களில் சட்டவிரோத தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (24.06.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நடவடிக்கையானது இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் ஹக்கஹின்ன மற்றும் நிகவெரட்டிய பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இதேவேளை குறித்த சந்தேகநபர்கள் பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கேகாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.