சடுதியாக விலை குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு - நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

சடுதியாக விலை குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு - நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

லிட்ரோ எரிவாயுவின் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 204 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று (4) காலை தெரிவித்துள்ளார்.

இதன்படி, 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 83 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 37 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புதிய விலை இன்று (4) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சடுதியாக விலை குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு - நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்! | Reduced New Gas Price Announced Sri Lankaமேலும், விலை குறைக்கப்பட்டதன் மூலம் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 2982 ரூபாவாகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1198 ரூபாவாகவும், 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 561 ரூபாவாகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.