யுவதியை வீடு புகுந்து தாக்கிய காவல்துறை உத்தியோகஸ்தருக்கு நேர்ந்த கதி...

யுவதியை வீடு புகுந்து தாக்கிய காவல்துறை உத்தியோகஸ்தருக்கு நேர்ந்த கதி...

யுவதி ஒருவரை வீடு புகுந்து தாக்கிய காவல்துறை உத்தியோகஸ்தர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தனமல்வில, ரணவர பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து குறித்த யுவதியை தாக்கி காயப்படுத்திய காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரே பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபரின் காதலி என கூறப்படும் யுவதியே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி காவல்துறை பிரிவில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரே இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தொடர்பில் திஸ்ஸமகாராம நீதவான் நீதிமன்றத்திலும் அறிக்கை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.