
ஒரே நாளில் கொள்ளையடிக்கப்பட்ட நான்கு கடைகள் - தீவிர விசாரணையில் காவல்துறை..!
தலவாக்கலை நகரில் நேற்று இரவு (10.07.2023) நான்கு கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்தனர்.
நுவரெலியா அட்டன் பிரதான வீதியின் அருகாமையிலுள்ள மருந்தகம், வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையம், கட்டுமானப்பொருள் வணிக நிலையம் மற்றும் டயர் கடை ஆகியனவே இனந்தெரியோதாரால் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.
கட்டுமானப்பொருள் வணிக நிலையத்தில் மூன்று இலட்ச ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் காவல் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.
அதேவேளை ஏனைய கடைகளில் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் தொடர்பாக கடை உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.