வேகமாக உயரும் டொலரின் பெறுமதி! கடும் சரிவில் இலங்கை ரூபா - மத்திய வங்கியின் தகவல்..!

வேகமாக உயரும் டொலரின் பெறுமதி! கடும் சரிவில் இலங்கை ரூபா - மத்திய வங்கியின் தகவல்..!

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது  இன்றையதினம்(17.07.2023) அமெரிக்க டொலருக்குநிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும்  கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

இன்றைய நாணய மாற்று விகிதம்

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (17.07.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை  327.16 ரூபாவாகவும், கொள்வனவு விலை 313.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

வேகமாக உயரும் டொலரின் பெறுமதி! கடும் சரிவில் இலங்கை ரூபா - மத்திய வங்கியின் தகவல் | Sri Lankan Rupee Value Today

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 249.00 ரூபாவாகவும், கொள்வனவு விலை  235.21 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 368.78 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி   350.96 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி  429.47 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  408.83 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.  

மேலும், இன்றையதினம் பல வெளிநாட்டு  நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி கடுமையாக  வீழ்ச்சியடைந்துள்ளது.