கொழும்பில் நேற்றிரவு கோரவிபத்து - சம்பவ இடத்திலேயே பலியான தமிழ் இளைஞர்கள்..!

கொழும்பில் நேற்றிரவு கோரவிபத்து - சம்பவ இடத்திலேயே பலியான தமிழ் இளைஞர்கள்..!

கொழும்பில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் தமிழ் இளைஞர்களான உறவினர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கொழும்பு - கொலன்னாவை பிரதான வீதியில் இன்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வத்தளையைச் சேர்ந்த அன்ரனி மரியநாயகம் (வயது 26), அவரது மைத்துனரான தேவதாஸ் கனிஸ்ரன் (22 வயது) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர்.

கொழும்பில் நேற்றிரவு கோரவிபத்து - சம்பவ இடத்திலேயே பலியான தமிழ் இளைஞர்கள் | Colombo Accident Tamil Youth Diesமோட்டார் சைக்கிள் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

பாரவூர்தியின் சாரதியைக் கைது செய்துள்ள காவல்துறையினர், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.