11 மாத குழந்தையுடன் மாயமான இளம் தாய்! காட்டிலிருந்து சடலங்கள் மீட்பு.

11 மாத குழந்தையுடன் மாயமான இளம் தாய்! காட்டிலிருந்து சடலங்கள் மீட்பு.

அங்குருவாதொட்ட - உருதுதாவ பிரதேசத்தில் இருந்து காணாமல்போன இளம் தாய் மற்றும் குழந்தை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் சடலங்கள் இரத்மல்கொட காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உருதுதாவ பகுதியினை சேர்ந்த வாசனா குமாரி என்ற 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயும், அவரது 11 மாத மகளும் கடந்த 18ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளதாக குறித்த பெண்ணின் கணவர் அங்குருவாதொட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

11 மாத குழந்தையுடன் மாயமான இளம் தாய்! காட்டிலிருந்து சடலங்கள் மீட்பு | Young Mother Missing Investigationஇதன் பின்னர் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையிலேயே இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.