வவுனியாவில் பாரவூர்தி விபத்து - இருவர் காயம்..!
வவுனியா பறன்நட்டகல் பகுதியில் பாரவூர்தி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் , சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் காயமடைந்து , வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை முருகண்டியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பாரவூர்தி , பறன்நட்டகல் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்ததன் காரணமாகவே , குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை , வவுனியா ஓமந்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
