மனைவியின் உரிமத்தை தவறாக பயன்படுத்தி கணவன் செய்த செயல்..!

மனைவியின் உரிமத்தை தவறாக பயன்படுத்தி கணவன் செய்த செயல்..!

மருதானையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளது.

பெண் ஒருவர் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் உரிமத்தை தவறாக பயன்படுத்தி இந்த மோசடி இடம்பெற்றுள்ளது. 

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 லட்சத்து 30,000 ரூபாவை சந்தேகநபர், பெற்றுக்கொண்டுள்ளார்.

மனைவியின் உரிமத்தை தவறாக பயன்படுத்தி கணவன் செய்த செயல் | Sri Lanka Bureau Of Foreign Employment Vacancies

பணம் கொடுத்த இளைஞனுக்கு வேலை கிடைக்காததால், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் மனைவி மருதானை - தேவானம் பியதிஸ்ஸ மாவத்தையில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும் சந்தேகநபர் அந்த முகவரகத்தின் முகாமையாளராக கடமையாற்றியதாகவும் தெரியவந்துள்ளது.