திடீரென இடிந்த வீழ்ந்தது மரணக்கிணறு -காவல்துறை உத்தியோகத்தர் மரணம்..!
திருகோணமலை கந்தளாய் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற திருவிழாவொன்றில் மரணக்கிணறு இடிந்து வீழ்ந்த விபத்தில் காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் கந்தளாய், லைட் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜானக சஞ்சீவ (46) என்பவரே உயிரிழந்தவராவார்.

எசல திருவிழாவின் முடிவில் இரண்டு தேரர்களும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த காவல்துறை அதிகாரிகளும் கடைசியாக நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் நிகழ்ந்தது.
கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கந்தளாய் பதில் காவல் நிலைய அத்தியட்சகர் கே. எம். எஸ். டி. கருணாரத்னவின் உத்தரவின் பேரில், தலைமையக காவல் நிலையப் பிரதான பரிசோதகர் கே. டபிள்யூ. எல். விக்கிரமரத்னவின் பணிப்புரையின் பேரில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.