கடலில் மூழ்கி மூன்று இளைஞர்கள் மாயம்: தேடும் பணியில் உயிர்காப்பு படையினர்.

கடலில் மூழ்கி மூன்று இளைஞர்கள் மாயம்: தேடும் பணியில் உயிர்காப்பு படையினர்.

நீர்கொழும்பு - ஏத்துகால கடற் பிரதேசத்தில் மூன்று இளைஞர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (23.07.2023) மதியம் 12.45 மணியளவில் கடலில் நீராடச் சென்ற போதே குறித்த இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடலில் மூழ்கி மூன்று இளைஞர்கள் மாயம்: தேடும் பணியில் உயிர்காப்பு படையினர் | Three Youths Drowned In Sea In Negombo

டயகம, சுன்னாகம், சாந்தபுரம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 20 முதல் 23 வயதுக்கு இடைப்பட்ட மூன்று இளைஞர்களே காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணிகளில் உயிர்காப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.