தாண்டிக்குளத்தில் கடுகதி தொடருந்து பாரவூர்தியுடன் மோதி விபத்து: இருவர் படுகாயம் .

தாண்டிக்குளத்தில் கடுகதி தொடருந்து பாரவூர்தியுடன் மோதி விபத்து: இருவர் படுகாயம் .

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த கடுகதி தொடருந்து, தாண்டிக்குளம் பகுதியில் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் இன்று (23.07.2023) மதியம் 3 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கடுகதி தொடருந்து தாண்டிக்குளம் பகுதியில் பயணித்த போது திருநாவற்குளம் செல்லும் பாதுகாப்பற்ற தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட பாரவூர்த்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

தாண்டிக்குளத்தில் கடுகதி தொடருந்து பாரவூர்தியுடன் மோதி விபத்து: இருவர் படுகாயம் (Photos) | Train Accident In Vavuniya Two Injured

தாண்டிக்குளத்தில் கடுகதி தொடருந்து பாரவூர்தியுடன் மோதி விபத்து: இருவர் படுகாயம் (Photos) | Train Accident In Vavuniya Two Injuredஇதில் பாரவூர்தியின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தாண்டிக்குளத்தில் கடுகதி தொடருந்து பாரவூர்தியுடன் மோதி விபத்து: இருவர் படுகாயம் (Photos) | Train Accident In Vavuniya Two Injured

தொடருந்து கடவையை கடக்க முயன்ற போது தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், பாரவூர்தியில் பயணித்த சாரதியுடன் மற்றும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு வவுனியா பொதுவைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தாண்டிக்குளம் பகுதியை சேர்ந்த இருவரே படுகாயமடைந்தனர்கள் ஆவர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தாண்டிக்குளத்தில் கடுகதி தொடருந்து பாரவூர்தியுடன் மோதி விபத்து: இருவர் படுகாயம் (Photos) | Train Accident In Vavuniya Two Injured