மகனின் கொடுமை தாங்க முடியாமல் பொலிஸ் நிலையம் சென்ற தாய்.

மகனின் கொடுமை தாங்க முடியாமல் பொலிஸ் நிலையம் சென்ற தாய்.

 

வேயங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 75 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் மகன் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்று பிற்பகல் வேயங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு வந்து தனது மகன் தன்னை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.

தற்போது வரை அகுனுகொலபெலெஸ்ஸ பிரதேசத்தில் தனது மகளின் பராமரிப்பில் இருந்ததாக தாய் தெரிவித்துள்ளார்.

மகனின் கொடுமை தாங்க முடியாமல் பொலிஸ் நிலையம் சென்ற தாய் | Mother And Son Love Sri Lanka Police

எனினும், தனது மகளுக்கும், கணவருக்கும் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வேயங்கொடை, தல்கஸ்மோட்டை பிரதேசத்தில் உள்ள தனது மகனின் வீட்டிற்கு வந்துள்ளார்.

ஆனால் தனது மகன் மற்றும் மருமகளின் தொல்லைகளை பொறுக்க முடியாமல் பொலிஸிலாரிடம் முறைப்பாடு செய்ய வந்ததாக அந்த தாயார் குறிப்பிட்டுள்ளார்.