நாட்டின் சில பிரதேசங்களில் மழை - இன்றைய வானிலை..!

நாட்டின் சில பிரதேசங்களில் மழை - இன்றைய வானிலை..!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்று(4) அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில் இவ்வாறு எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை

மட்டக்களப்பு - பிரதானமாக சீரான வானிலை

கொழும்பு - பிரதானமாக சீரான வானிலை

யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை

கண்டி - பிரதானமாக சீரான வானிலை

நுவரெலியா - பிரதானமாக சீரான வானிலை

இரத்தினபுரி - பிரதானமாக சீரான வானிலை

திருகோணமலை - பிரதானமாக சீரான வானிலை

மன்னார் - பிரதானமாக சீரான வானிலை

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.