சட்டவிரோதமாக பீடி இலைகளை கடத்த முற்பட்டவர் கைது!!

சட்டவிரோதமாக பீடி இலைகளை கடத்த முற்பட்டவர் கைது!!

வண்ணாத்திவில்லு ஆலங்க தோனி கடற்கரைப் பகுதியில் பீடி இலைகளை முச்சக்கர வண்டிக்கு ஏற்ற முற்பட்ட ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை (04.08.2023)  மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இவ்வாறு சட்டவிரோதமாக பீடி இலைகளை கடத்துவதற்கு முற்பட்டு வருவதாக வண்ணாதிவில்லு பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக பீடி இலைகளை கடத்த முற்பட்டவர் கைது | Arrested For To Smuggle Beedi Leaves Illegally

இதன்போது சுமார் 16 உரைகளில் 500 கிலோவிற்கும் அதிக எடையுடைய பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பீடி இலைகளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடத்தலோடு சம்மந்தப்பட்ட கரைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியானதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், பீடி இலைகளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி ஆகியவற்றையும் புத்தளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர். GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery