
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்..!
எதிர்வரும் பெரும்போகத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக உரம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி அனைத்து விவசாயிகளுக்கும் பரிந்துரைக்கப்படும் பண்டி உரம்(எம்ஓபி) இலவசமாக வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் மற்றுமொரு உரத்தின் விலையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது அரசாங்கம் மேற்கொண்டுவரும் உர விநியோகத்தில் இருந்து விலகி விவசாயிகளே உரத்தை நேரடியாக கொள்வனவு செய்யும் வகையில் அவர்களது வங்கி கணக்கில் பணத்தை வைப்பிலிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.