வகுப்பு ஆசிரியரால் பாடசாலை மாணவி வன்புணர்வு - தீவிர விசாரணையில் காவல்துறை!!
பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய ஆசிரியர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குருநாகல் கட்டுபொத்த பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தரம்13 இல் கற்கும் மாணவியை வகுப்பு ஆசிரியர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக தெரிவித்து கட்டுபொத்த காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

அத்துடன் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவி சில மாத்திரைகளை உட்கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சியம்பலாவையில் வசிக்கும் தரம் 13 இல் கல்வி கற்கும் குறித்த பாடசாலை மாணவி சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கட்டுபொத காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முறைப்பாட்டின்படி, ஜூலை 23 அன்று தனது வகுப்பு ஆசிரியரால் தான் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டதாக மாணவி தெரிவித்துள்ளார்.