தென்னிலங்கையில் மற்றுமொரு சடலம் மீட்பு..!

தென்னிலங்கையில் மற்றுமொரு சடலம் மீட்பு..!

ராகம புகையிரத  நிலையத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று நேற்று (05) மீட்கப்பட்டுள்ளது.

சடலம் யாருடையது என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த சடலம் 65 தொடக்கம் 75 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருடையது எனவும், சுமார் 06 அடி 02 அங்குல உயரமும், மெல்லிய உடலமைப்பும் உடையவராக கூறப்படுகிறது.

தென்னிலங்கையில் மற்றுமொரு சடலம் மீட்பு | Deadbody Was Recovered By Police At Ragama

மேலும் அவர் வெள்ளை முடியும், நடுவில் வழுக்கையும், மீசையும் தாடியும் வளர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இறந்தவர் வெள்ளை கலந்த சாம்பல் நிறச் சட்டையும் சாம்பல் நிற காற்சட்டையும் அணிந்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நிகழ்த்துவதாக கூறப்படுகிறது.