வீடொன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் - மகள் வழங்கிய தகவல்.

வீடொன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் - மகள் வழங்கிய தகவல்.

ஹக்மீமன, ஹியார் பிரதேசத்தில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 47 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் நேற்று காலை வேயங்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

வீடொன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் - மகள் வழங்கிய தகவல் | Woman Was Brutally Murdered In A House

சந்தேக நபர் கடந்த 04ஆம் திகதி இரவு பெண் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்து வன்புணர்வு செய்த பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் சந்தேகநபர் பெண்ணிடம் இருந்த நகைகள் மற்றும் இரண்டு கைத்தொலைபேசிகளை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்தனர்.

அக்மீமன, ஹியாரே பகுதியிலுள்ள வீட்டில் 65 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் நேற்று இரவு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீடொன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் - மகள் வழங்கிய தகவல் | Woman Was Brutally Murdered In A House

அந்த பெண்ணின் மகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய, இது தெரியவந்துள்ளது.

பின்னர் விசாரணையில் அவர் அணிந்திருந்த நகை மற்றும் காதணிகளை யாரோ எடுத்துச் சென்றது தெரியவந்தது.

அவரது முகத்திலும் காயம் இருந்ததை அவதானித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.