பாடசாலை மாணவ​ன் மீது கொடூர தாக்குதல்! சந்தேகநபர் தலைமறைவு.

பாடசாலை மாணவ​ன் மீது கொடூர தாக்குதல்! சந்தேகநபர் தலைமறைவு.

மீரிகமவில் தொடருந்து கடவையில் சென்ற பாடசாலை மாணவ​னின் கழுத்தை வெட்டி காயப்படுத்திய அடையாளம் தெரியாத நபரொருவர் மாணவனின்  பையை கொள்ளையடித்து சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில், கிரிஉல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனே பாதிக்கப்பட்டுள்ளார்.

மீரிகம பேருந்து நிலையத்திற்கு பேருந்தில் வந்த மாணவன், மற்றுமொரு மாணவனுடன், தொடருந்து தண்டவாளத்தில் வில்வத்த பகுதியை நோக்கி நடந்து சென்றுக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

பாடசாலை மாணவ​ன் மீது கொடூர தாக்குதல்! சந்தேகநபர் தலைமறைவு | School Student Attack Admited In Hospitalஇந்நிலையில், காயமடைந்த மாணவனின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

பாடசாலை மாணவ​ன் மீது கொடூர தாக்குதல்! சந்தேகநபர் தலைமறைவு | School Student Attack Admited In Hospital

குறித்த மாணவர்கள் இருவரும் தொலைபேசியை பார்த்துக்கொண்டு பயணித்தமையால், நடந்த சம்பவத்தை அவதானிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதன்போது சந்தேகநபரினால் கொள்ளையடிக்கப்பட்ட பை, அப்பிரதேசத்தில் உள்ள பற்றைக்காட்டுக்குள் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.