வாகன சாரதியை மிரட்டி ஆயுதமுனையில் வாகனம் கடத்தல்! பொலிஸார் எச்சரிக்கை.

வாகன சாரதியை மிரட்டி ஆயுதமுனையில் வாகனம் கடத்தல்! பொலிஸார் எச்சரிக்கை.

இரத்தினபுரி - அயகம பகுதியில் ஆயுதங்களை காட்டி மிரட்டி வாகனமொன்று கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

அயகம, தேயிலை கொலனி - பொகஹவன்குவா பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

நேற்றுமுன் தினம் இரவு (05) வாடகைக்கு செல்வதாக கூறி காரொன்றினை இடைமறித்து இருவர் வாகனத்தில் ஏறியுள்ளனர்.

வாகன சாரதியை மிரட்டி ஆயுதமுனையில் வாகனம் கடத்தல்! பொலிஸார் எச்சரிக்கை | Carjacking At Gunpointஇதன்போது காரில் சென்றவர்கள் சாரதிக்கு தயிர் கொடுத்துள்ளனர். அதனை பருக சாரதி மறுத்ததால் வலுக்கட்டாயமாக குடிக்க கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகன சாரதியை மிரட்டி ஆயுதமுனையில் வாகனம் கடத்தல்! பொலிஸார் எச்சரிக்கை | Carjacking At Gunpoint

இதன்பின்னர் சாரதியை ஆயுதங்களைக் காட்டி மிரட்டி காரில் இருந்து இறக்கிவிட்டு துப்பாக்கி முனையில் வாகனத்தை கடத்திச் சென்றுள்ளதாக அயகம பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதுடன், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபர்கள் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சாரதியின் பணப்பையையும் எடுத்துச்சென்றுள்ளதுடன்,  சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.