மீன்பிடிக்கச் சென்ற போது பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த சோகம்.
மஹாஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நேமிகே ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற போது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (07) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹாவெல் கிராமம், பொல்லே பத்த பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுவன் சிலருடன் நேமிகே ஏரியில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கிய ஒருவரை காப்பாற்ற உயிரிழந்த மாணவன் முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அம் மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் சிறுவனுடன் வந்தவர்கள் அவரின் சடலத்தை மீட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.