அதிகாலையில் கோர விபத்து! இளம் தம்பதி பலி.

அதிகாலையில் கோர விபத்து! இளம் தம்பதி பலி.

அனுராதபுரம் - இராஜாங்கனைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (09.08.2023) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இளம் தம்பதியினர் பயணித்த ஹயஸ் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அருகில் இருந்த மரத்துடன் மோதியுள்ளது.

இதன்போது ஹயஸ் வாகனத்தைச் செலுத்திச் சென்ற 28 வயதுடைய கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதிகாலையில் கோர விபத்து! இளம் தம்பதி பலி | Young Couple Tragically Died In A Car Accident

படுகாயங்களுடன் நோயாளர் காவுகை வாகனத்தில் இராஜாங்கனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 26 வயதுடைய மனைவி இடைவழியில் உயிரிழந்துள்ளார்.

இருவரினதும் சடலங்களும் இராஜாங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த இளம் தம்பதியினர் அனுராதபுரம் - பலுகஸ்வெவை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.