கொழும்பில் மின்சாரம் தாக்கி மாணவி ஒருவர் மரணம்.

கொழும்பில் மின்சாரம் தாக்கி மாணவி ஒருவர் மரணம்.

கொழும்பு - கொலன்னாவை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (08.08.2023) மாலை இடம்பெற்றுள்ளது.

பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதற்காக ஆடையை அழுத்த மின்னழுத்தியை பயன்படுத்திய போதே மின்சாரம் தாக்கி குறித்த மாணவி உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் மின்சாரம் தாக்கி மாணவி ஒருவர் மரணம் | Tamil Student Dies In Colombo

கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் சுரேந்திரன் கவிதா (வயது 15) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரின் சடலத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.