நானுஓயாவில் கத்திக்குத்துக்கு இலக்காகிய வர்த்தகர் உயிரிழப்பு!

நானுஓயாவில் கத்திக்குத்துக்கு இலக்காகிய வர்த்தகர் உயிரிழப்பு!

நுவரெலியா- நானுஓயா நகரில் நேற்றுமுன்தினம் (07.08.2023) காலை வர்த்தக நிலையத்தின் வாடகை மற்றும் பணம் கொடுக்கல்-வாங்கல் காரணமாக முரண்பாட்டில் சிக்கிய நபர் உயிரிழந்துள்ளார்.

இம்முரண்பாடு வாக்குவாதமாக ஆரம்ப நிலையிலிருந்து உச்சநிலையை அடைந்து குறித்த வர்த்தகர் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நானுஓயாவில் கத்திக்குத்துக்கு இலக்காகிய வர்த்தகர் உயிரிழப்பு! | A Businessman Was Killed In A Knife In Nanu Oya

நானுஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய கருப்பையா இராமசுந்தரம் என்ற கத்திக்குத்துக்கிலக்காகிய வர்த்தகர் சிகிச்சை பலனின்றி இன்று (09.08.2023) காலை உயிரிழந்துள்ளார்.நானுஓயாவில் கத்திக்குத்துக்கு இலக்காகிய வர்த்தகர் உயிரிழப்பு! | A Businessman Was Killed In A Knife In Nanu Oya

குறித்த சம்பவத்தில் கத்தியால் குத்தியவர்கள் சகோதரர்கள் எனவும், அவர்கள் இருவரும் தாமாகவே நானுஓயா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.