நூறு அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கரவண்டி! ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் வைத்தியசாலையில்..

நூறு அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கரவண்டி! ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் வைத்தியசாலையில்..

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி நூறு அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து (09.08.2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.  

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று வயது குழந்தை உட்பட நால்வர் படுகாயமடைந்து மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நூறு அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கரவண்டி! ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் வைத்தியசாலையில்.. | Tricycle Accident In Up Country

காயமடைந்தவர்கள் நீர்கொழும்பில் வசிப்பவர்கள் எனவும் உறவினரின் இறுதி சடங்கிற்காக மஸ்கெலிய சென்றிருந்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

மஸ்கெலியா-நோர்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் ஹபுகஸ்தான பிரதேசத்தில் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாட்டை இழந்தமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.