கொழும்பில் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட குடும்பஸ்தர்!

கொழும்பில் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட குடும்பஸ்தர்!

 கொழும்பு – மகரகம பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (10) இரவு இடம்பெற்றுள்ளது.

கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் நண்பர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் ஒருவரை மற்றைய நபர் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார்.

கொழும்பில் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட குடும்பஸ்தர்! | A Family Member Was Mercilessly Killed In Colombo

 

31 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இந்தச் சம்பவத்தில் சாவடைந்துள்ளார்.

கொலையாளியான 28 வயதுடைய இளைஞர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.