யாழில் 69,000 இற்கும் மேற்பட்டவர்கள் வறட்சியினால் பாதிப்பு.

யாழில் 69,000 இற்கும் மேற்பட்டவர்கள் வறட்சியினால் பாதிப்பு.

நாட்டில் நிலவும் வறட்சியினால் ஒன்பது மாவட்டங்களில் சுமார் 100,000 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, இரத்தினபுரி, பதுளை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு வறட்சியால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30,862 குடும்பங்களைச் சேர்ந்த 99,594 பேர் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

யாழில் 69,000 இற்கும் மேற்பட்டவர்கள் வறட்சியினால் பாதிப்பு | 69 000 People Affected By Drought In Jaffnaயாழ்ப்பாணத்தில் 69,000 இற்கும் மேற்பட்ட நபர்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கானைப் பிரதேசம் ஜூன் மாதத்திற்குப் பிறகு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை போதிய மழைவீழ்ச்சி பதிவாகாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.