மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு தீ வைத்த கணவன்.

மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு தீ வைத்த கணவன்.

களுத்துறையில் மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு கணவன் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

களுத்துறை, கமகொட, ரஜவத்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவருக்கும் இடையில் சில காலமாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு தீ வைத்த கணவன் | Husband Locked His Wife In The House And On Fireசந்தேகநபர் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை மது போதையில் வந்து ரப்பர் மெத்தை, தலையணைகள் மற்றும் துணிகளை வீட்டில் வைத்த பின்பு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு விசாரணைகளில் கணவன் இச் செயலை செய்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மெலும் தீயினால் வீட்டின் சமையலறை முழுவதும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.