இலங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் விபரீத முடிவால் அதிர்ச்சி!

இலங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் விபரீத முடிவால் அதிர்ச்சி!

 ரம்புக்கனை பத்தம்பிட்டிய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் விஷம் அருந்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று திங்கட்கிழமை (14) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் நால்வரும் மீட்கப்பட்டு மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

ரம்புக்கனை பத்தம்பிட்டிய கிராமத்தில் வசிக்கும் 28 வயதுடைய தந்தை, 27 வயதுடைய தாய் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள் ஆகியோரே மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாவனல்லை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தாய், தந்தை இருவரும் வீட்டில் இருந்த தமது இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தாமும் அருந்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அவர்கள் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்ட அயலவர்கள், அவர்கள் நால்வரையும் முச்சக்கரவண்டியில் கொண்டு சென்று, மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் விபரீத முடிவால் அதிர்ச்சி! | Shocked By The Perverse Decision Of Four Members

எனினும் அவர்கள் எதற்காக இப்படி ஒருவெடுத்தார்கள் என்பதற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.