38 வயது பெண்ணுடன் சிக்கிய 26 வயது இளைஞர்!

38 வயது பெண்ணுடன் சிக்கிய 26 வயது இளைஞர்!

கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய பெண்ணும் நிகவெரட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய இளைஞரும் பொலிஸாரால் கைதுசெய்யபப்ட்டுளானர்

இளைஞர் கட்டுநாயக்கா, கோவின்ன பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசி திருத்தும் நிலையம் ஒன்றை நடத்தி வருவதுடன் இருவரும் அதே பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

38 வயது பெண்ணுடன் சிக்கிய 26 வயது இளைஞர்! | A Young Man Caught With A Young Womanஇன்றைய தினம் காலை கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து உணவு பெற்று இந்த பெண் 5,000 ரூபா போலி நாணயத்தாளை கொடுத்துள்ளார்.

இது தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸாருக்கு உணவக உரிமையாளர் தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, பெண்ணை கைது செய்த கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீண்ட விசாரணைகளின் பின்னர் கையடக்கத் தொலைபேசி பழுதுபார்ப்பவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவரிடமிருந்து 17 போலி 5,000 ரூபா நாணயத்தாள்கள், அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்ட கலர் ஸ்கேனர் மற்றும் பல கணினி சாதனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.