கொழும்பு தபால் நிலையத்திற்கு கிடைத்த மர்ம பொதி- சந்தேக நபர் கைது!

கொழும்பு தபால் நிலையத்திற்கு கிடைத்த மர்ம பொதி- சந்தேக நபர் கைது!

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

அப் பொதியை சோதனையிட்டபோது அதில் குஷ் போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டுட்டுள்ளது.

குறித்த பொதியில் 600 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொழும்பு தபால் நிலையத்திற்கு கிடைத்த மர்ம பொதி- சந்தேக நபர் கைது! | Colombo Post Office Suspect Arrested

குறித்த பொதியை எடுத்துச் செல்ல வந்த நபர் ஒருவர் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருளின் மொத்த பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.